Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொது இடத்தில் சண்டையிட்டதாக ஆயுதப்படை அதிகாரிகள் மூவர் மீது குற்றச்சாட்டு

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் ஆயுதப்படை அதிகாரிகள் மூவர் மீது பொது இடத்தில் சண்டையிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இரண்டாம் வாரண்ட் அதிகாரி இங் ஸி வேய் ரேஞ்செர் (Ng Zhi Wei Ranger)..

மூன்றாம் வாரண்ட் அதிகாரி டாங் சீ டாட் கெல்வின் (Tang Chee Tat, Kelvin)..

மூன்றாம் வாரண்ட் அதிகாரி கெவின் நிக்கலஸ் சைமன் (Kevin Nicholas Simon)..

ஆகிய மூவரும் அடுத்த மாதம் (நவம்பர்) 8ஆம் தேதி குற்றத்தை ஒப்புக்கொள்வர் என்று நம்பப்படுகிறது.

நீதிமன்றத்தில் வழக்கு முடிவுக்கு வந்ததும் அவர்களுக்கு எதிராக மேலும் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது பற்றித் தற்காப்பு அமைச்சும் ஆயுதப்படையும் பரிசீலிக்கும்.

தற்போது வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் இருப்பதால் அது பற்றி மேலும் கருத்துத் தெரிவிக்க முடியாது என்று அமைச்சு 'செய்தி'யிடம் கூறியது.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்