Skip to main content
மேலும் 300 பானக் கலன் இயந்திரங்கள் விரைவில்!
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

மேலும் 300 பானக் கலன் இயந்திரங்கள் விரைவில்!

வாசிப்புநேரம் -
மேலும் 300 பானக் கலன் இயந்திரங்கள் விரைவில்!

படம்: CNA/Syamil Sapari

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் பானக் கலன்களைத் திரும்பக் கொடுப்பதற்கு மேலும் 300 இயந்திரங்கள் பொருத்தப்படவுள்ளன.

உயர்கல்வி நிலையங்கள், வெளிநாட்டு ஊழியர் தங்குமிடங்கள், தொழிற்பேட்டைகள், பொழுதுபோக்கு நிலையங்கள், சுற்றுப்பயணத் தலங்கள் போன்ற இடங்களில் அவை பொருத்தப்படும்.

பானக் கலன்களைத் திரும்பக் கொடுக்கும் திட்டத்தின்கீழ் அது அடங்கும்.

திட்டத்தை வழிநடத்தும் BCRS Ltd நிறுவனம் இதுவரை 1,200 இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருப்பதாகச் சொன்னது.

திட்டம் ஏப்ரல் முதல் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.

இடைப்பட்ட காலத்தில் கற்றுக்கொண்ட பாடங்களைக் கொண்டு கலன்களைத் திரும்பக் கொடுக்கும் நடைமுறையை
மேம்படுத்தியிருப்பதாக நிறுவனம் சொன்னது.

திட்டம் தொடங்கியபோது ஒரு வாரத்தில் சராசரி விகிதம் 2.8 கலன்கள் திரும்பக் கொடுக்கப்பட்டன.

தற்போது அது 5.9 கலன்கள் என்ற விகிதத்தில் இருக்கிறது.

திட்டத்தின்கீழ் பானங்களின் காலி போத்தல்களையும் கலன்களையும் திரும்பத் தந்து 10 காசு பெறலாம்.
 
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்