Skip to main content
ஜூரோங்கில் இயற்கைக்கு மாறான மரணம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஜூரோங்கில் இயற்கைக்கு மாறான மரணம்

யுவான் சிங் சாலையில் உள்ள Parkview Mansions கூட்டுரிமை வீட்டில் ஒன்றில் குறைந்தது ஒருவர் மாண்டு கிடக்கக் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கைக்கு மாறான மரணம் அது என்று போலிசார் சம்பவத்தை வகைப்படுத்தியுள்ளனர்

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்:  ஜூரோங்கில் உள்ள Yuan Ching Road-ல் இருக்கும் Parkview Mansions கூட்டுரிமை வீடு ஒன்றில் இன்று நடந்த குடும்பச் சண்டையில் இருவர் மாண்டனர்.  இயற்கைக்கு மாறான மரணம் என்று அச்சம்பவத்தை போலிசார் வகைப்படுத்தியுள்ளனர்.

சம்பவத்தின் தொடர்பில் மேலும் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இன்று காலை எட்டு மணி அளவில்,  சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை Channel News Asia-விடம் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து மூன்று ஆம்புலன்ஸ் வாகனங்கள் Yuan Ching Road-ற்கு அனுப்பிவைக்கப்பட்டன.

Related article image

30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும், ஒரு ஆணும், 40 வயது மதிக்கத்தக்க மற்றொரு பெண்ணும்,  தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனையில் கணவன் மனைவி இருவரின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டது. சம்பவத்தின் தொடர்பில், நேயர் ஒருவர் தொலைபேசி வழி எங்களைத் தொடர்பு கொண்டார். 

சம்பவம் நடந்த வீட்டில் வசித்த கணவன் மனைவிக்கு இடையே காலையில் சண்டை நடந்ததாகவும் அதைத் தடுக்க இல்லப் பணிப்பெண் முயன்றதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள் கட்டுரைகள்