Skip to main content
தெலுக் பிளாங்கா கொலை: 32 வயது ஆடவர் மீது குற்றச்சாட்டு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

தெலுக் பிளாங்கா கொலை: 32 வயது ஆடவர் மீது குற்றச்சாட்டு

வாசிப்புநேரம் -
தெலுக் பிளாங்கா கொலை: 32 வயது ஆடவர் மீது குற்றச்சாட்டு

படம்: CNA/Ili Mansor

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 07 Oct 2026 09:44AM புதுப்பிப்பு : 07 Oct 2026 12:24PM
தெலுக் பிளாங்கா ஹைட்ஸில் (Telok Blangah Heights) ஒருவர் மாண்டதைத் தொடர்ந்து 32 வயது ஆடவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூரரான கேப்ரியல் ஃபூங் ஷி செங் (Gabriel Foong Shi Cheng), 73 வயது தாம் நாம் போவைக் (Tham Nam Poh) கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம் நேற்று முன்தினம் (ஆக்டோபர் 5) நடந்தது.

மாலை 6 மணியளவில் புளோக் 61 தெலுக் பிளாங்கா ஹைட்ஸ் பகுதியில் உதவிகேட்டு அழைப்பு வந்ததாகக் காவல்துறை கூறியது.

ஃபூங் எவ்வாறு கொலை செய்தார் என்பது குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து அவர் காணொளி வாயிலாக நீதிமன்ற விசாரணையில் இணைந்தார்.

அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது புளோக்கின் கீழ்த்தளத்தில் ஆடவர் அசைவின்றிக் காணப்பட்டார்.

காயமுற்ற 53 வயது ஆடவரும் அங்கிருந்தார்.

இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

மனநல மதிப்பீட்டிற்குச் செல்ல அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

ஃபூங் மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்தாரா என்பதை மதிப்பிடுவதற்காக அவர் மனநல மதிப்பீட்டிற்குச் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்படலாம்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்