Skip to main content
E
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

E-Bridge பாலர் பள்ளிகளில் 34 மாணவர்கள், 10 ஊழியர்களுக்கு வயிற்றுக்கோளாறு

வாசிப்புநேரம் -
E-Bridge பாலர் பள்ளிகளில் 34 மாணவர்கள், 10 ஊழியர்களுக்கு வயிற்றுக்கோளாறு

படம்: E-Bridge பாலர்பள்ளி இணையத்தளம்

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

செங்காங், டாவ்சன் (Dawson) ஆகிய இடங்களிலுள்ள E-Bridge பாலர் பள்ளிகளில் ஏற்பட்ட நச்சுணவுச் சம்பவத்தில் 44 பேர் பாதிக்கப்பட்டனர். அதிகாரிகள் சம்பவத்தை விசாரிக்கின்றனர்.

34 மாணவர்களும் 10 பள்ளி ஊழியர்களும் பாதிக்கப்பட்டதாகத் தொற்றுநோய்த் தடுப்பு அமைப்பு (Communicable Diseases Agency), குழந்தைப் பருவ மேம்பாட்டு அமைப்பு (Early Childhood Development Agency), சிங்கப்பூர் உணவு அமைப்பு ஆகியவை கூட்டாக அறிவித்தன.

நொரொவைரஸ் (norovirus) கிருமித்தொற்றால் வயிற்றுக்கோளாறு தொடங்கியிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

புதன்கிழமை நிலவரப்படி 12 மாணவர்களும் 4 ஊழியர்களும் குணமாகிவிட்டனர், மற்றவர்கள் குணமாகிவருவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்ற மாதம் சர்க்கியுட் ரோட்டிலுள்ள இன்னொரு E-Bridge பள்ளியில் அதே போன்ற சம்பவம் நடந்தது.

அதைப்போல் பொங்கோலிலுள்ள Mulberry Learning பள்ளியிலும் மவுண்ட்பேட்டன் (Mountbatten) வட்டாரத்தில் உள்ள PCF Sparkletots பாலர் பள்ளியிலும் வயிற்றுக்கோளாற்றுச் சம்பவங்கள் நடந்தன.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்