முப்பரிமாண முறையில் பொருள்களை அச்சிடுவதற்கான புதிய தரநிலை அறிமுகம்
முப்பரிமாண முறையில் பொருள்களை அச்சிடுவதில் செலவைக் குறைக்கவும் குறைவான கழிவை வெளியேற்றவும் புதிய தரநிலை அறிமுகம் கண்டுள்ளது.

படம்: AFP
முப்பரிமாண முறையில் பொருள்களை அச்சிடுவதில் செலவைக் குறைக்கவும் குறைவான கழிவை வெளியேற்றவும் புதிய தரநிலை அறிமுகம் கண்டுள்ளது.
துறை சார்ந்தவர்கள், அமைப்புகள், சிங்கப்பூர் தற்காப்புப் படை ஆகியவற்றின் உதவியோடு தரநிலைகள் வகுக்கப்பட்டன.
ஆகாயப் போக்குவரத்து, உயிர்மருத்துவ அறிவியல் துறைகளில் முப்பரிமாண முறையில் பொருள்களை உற்பத்தி செய்வது பிரபலம் அடைந்துள்ள நிலையில், புதிய தரநிலை அறிமுகம் செய்யப்பட்டது.
பயிற்சி சாதனங்கள், ஆளில்லா வானூர்தி போன்றவற்றைத் தயாரிக்க சிங்கப்பூர்த் தற்காப்புப் படை முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
அதில் பெற்ற அனுபவங்களை அரசாங்க அமைப்புகளுடனும் துறைசார்ந்தவர்களுடனும் அது பகிர்ந்துகொண்டது.
அதன் மூலம் உருவாக்கப்பட்ட தரநிலைகள், சுயமாக முப்பரிமாண அச்சிடும் முறைகளை உருவாக்கும் வளங்களைக் கொண்டிருக்காத சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்குப் பயன் தரும்.
அச்சிடும் முறையில் கழிவுப்பொருள்களைக் குறைக்கவும், கடுமையான காயங்களைக் ஏற்படுத்தக்கூடிய தவறுகளைத் தவிர்க்கவும் அது உதவும் எனத் தெரிவிக்கப்பட்டது.