Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

போலிக்கணக்கு காட்டி அரசாங்கத்தை ஏமாற்றியதாக நால்வர் மீது குற்றச்சாட்டு

வாசிப்புநேரம் -
போலிக்கணக்கு காட்டி அரசாங்கத்தை ஏமாற்றியதாக நால்வர் மீது குற்றச்சாட்டு

படம்: CNA/Syamil Sapari

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அரசாங்க நிதித்திட்டங்களில் பணம் பெறப் போலிக்கணக்குகளைக் காட்டி ஏமாற்றியதாக நால்வர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

AK Global Tech நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் சாமுவேல் சிம் சூன் ஹாக் (Samuel Sim Choon Hock), இயக்குநர் டே ஸ்ஸே கியாங் (Tay Sze Kiang), வோங் சியோங் யான் (Wong Siong Yann), லியோனார்ட் லிம் ட்ஸே யுயென் (Leonard Lim Tze Yuen) ஆகிய நால்வரும் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

அவர்கள் 39 வயதுக்கும் 47 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

அவர்கள் இடைக்காலப் பணியிடை மாற்றம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் மானியத்தையும் உதவித்தொகையையும் பெறத் திட்டமிட்டனர் என்று குற்றச்சாட்டு சொல்கிறது.

சிம் மீது 3 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன; மற்றவர்கள் மீது ஒவ்வொரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

வோங், லிம் ஆகிய ஊழியர்களின் பெயரில் உதவித்தொகை பெற சிம் அவர்களது வருமானம் குறித்துப் பொய்யான தகவல்களைப் பதிவு செய்தார் என்று கூறப்பட்டது. டே அதற்கு உடந்தையாக இருந்ததாகச் சொல்லப்பட்டது.

அவர்கள் 89,100 வெள்ளி சமபள உதவியையும் 10,010 வெள்ளி உதவித்தொகையையும் பெற்றதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

வழக்கு விசாரணை இம்மாத இறுதியிலும் அடுத்த மாதத் தொடக்கத்தில் நடைபெறும்.

ஏமாற்றியது நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டு சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

போலியாகக் கணக்குக் காட்டியது நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டு சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்