Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் trending

அங் மோ கியோ விபத்து: 7 மாதக் குழந்தை உட்பட நால்வர் மருத்துவமனையில்

வாசிப்புநேரம் -
அங் மோ கியோ விபத்து: 7 மாதக் குழந்தை உட்பட நால்வர் மருத்துவமனையில்
8World
வெளியீடு : 09 Mar 2026 01:05PM புதுப்பிப்பு : 09 Mar 2026 01:17PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அங் மோ கியோவில் நேர்ந்த விபத்தில் 4 பேர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

அவர்களில் 7 மாதக் குழந்தையும் ஒன்று.

விபத்துக்குறித்து 'செய்தி' சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையிடமும் காவல்துறையிடமும் கேட்டது.

நேற்றுக்காலை 11.55 மணியளவில் சாலை விபத்துக்குறித்து அழைப்பு வந்ததாய் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர் தெரிவித்தனர்.

அங் மோ கியோ அவென்யூ 8 வழியே அங் மோ கியோ அவென்யூ 6-ஐ நோக்கிச் செல்லும் சாலையில் விபத்து நேர்ந்ததாகக் காவல்துறை சொன்னது.

2 பேருந்துகளும் ஒரு காரும் விபத்தில் சிக்கின.

விபத்தைக் காட்டும் காணொளிகளும் படங்களும் சமூகத் தளங்களில் பகிரப்பட்டன.

விபத்தில் சிக்கிய பேருந்துகள் SBS Transit நிறுவனத்தின் பேருந்துகள் என்பது காணொளியில் தெரிந்தது.

60 வயதுக் கார் ஓட்டுநரும் 3 பேருந்துப் பயணிகளும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

3 ஆடவர்கள் டான் டொக் செங் (Tan Tock Seng) மருத்துவமனைக்கும் குழந்தை KK மகளிர், சிறார் மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டனர். 

காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.

ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்