Skip to main content
சித்திரவதை செய்யப்பட்டுச் சிறுமி கொலை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சித்திரவதை செய்யப்பட்டுச் சிறுமி கொலை - தாய்க்கு 19 ஆண்டுகள், தாயின் காதலனுக்கு 30 ஆண்டுகள் சிறை

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் 4 வயது மகளை ஓரண்டாகச் சித்திரவதை செய்த தாய்க்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவருடன் சேர்ந்து சிறுமியைத் துன்புறுத்தி மரணம் விளைவித்த காதலனுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 17 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.

மரணமடைந்த சிறுமியின் பெயர் மேகன் குங் (Meghan Khung).

சிறுமியின் தாயார் 29 வயது ஃபூ லி பிங் (Foo Li Ping). அவர் வோங் ஷி சியாங் (Wong Shi Xiang) எனும் 38 வயதுக் காதலனுடன் சேர்ந்து தமது மகளைச் சித்திரவதை செய்து வந்துள்ளார்.

சித்திரவதை தாங்காமல் சிறுமி மரணமடைந்தார்.

குற்றத்தை மறைக்கச் சிறுமியின் உடலை அவர்கள் எரித்துள்ளனர்.

இருவரும் தாங்கள் செய்த குற்றத்தைக் கடந்த பிப்ரவரி மாதம் ஒப்புக்கொண்டனர்.

"மேகன் பல மாதங்களாக இருவரிடமும் உணவு, துணி கேட்டிருந்தாள். ஆனால் அந்த அடிப்படைத் தேவைகளைக்கூட அவர்கள் பூர்த்தி செய்யவில்லை. மிகவும் மோசமான இடத்திலும் சூழ்நிலையிலும் அவள் தூங்கினாள்.." என்று நீதிபதி தம்முடைய தீர்ப்பை வழங்கும்போது குறிப்பிட்டார்.

இது கடுங்குற்றம் என்றார் அவர்.

குழந்தையின் சடலத்தை மூன்றாம் நபரான 35 வயது நுவேல் சுவா ரோஷி (Nouvelle Chua Ruoshi) பயா லேபார் தொழிற்பேட்டைக்கு எடுத்துச் சென்று ஃபூ, வோங் ஆகியோருடன் எரித்ததாகக் கூறப்படுகிறது.

அவருடைய வழக்கு நிலுவையில் உள்ளது.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்