Skip to main content
ஊட்ரம் பார்க் ரயில் நிலையத்தில் சிறுநீர் கழித்த ஆடவர் கைது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஊட்ரம் பார்க் ரயில் நிலையத்தில் சிறுநீர் கழித்த ஆடவர் கைது

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் ஊட்ரம் பார்க் ரயில் நிலையத்தில் (Outram Park MRT) மின்படியில் சிறுநீர் கழித்த ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்தச் சம்பவத்தைப் பற்றி அறிந்த பிறகு, SMRT, SBS Transit நிறுவனங்களுடன் சேர்ந்து நடவடிக்கை மேற்கொண்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) சொன்னது.

கடந்த வெள்ளிக்கிழமை (10 ஜனவரி) மாலை நேரத்தில் சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

Complaint Singapore Facebook பக்கத்தில் அது பற்றி இணையவாசி ஒருவர் பதிவிட்டிருந்தார்.

ஊட்ரம் பார்க் ரயில் நிலையத்தின் மூன்றாம் வழியில் மின்படியின் கைப்பிடி மீது ஆடவர் ஒருவர் சிறுநீர் கழிப்பதைக் தமது நண்பர் கண்டதாக அந்த இணையவாசி குறிப்பிட்டார்.

ஆடவரை ஒருவர் அணுகியபோது அவர் உடனடியாக அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

சம்பவத்தின் தொடர்பில் 41 வயது ஆடவர் கைது செய்யப்பட்டதாக Channel 8 செய்தி தெரிவித்தது.

சம்பவம் விசாரிக்கப்படுகிறது.
ஆதாரம் : 8 Days/8 World

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்