Skip to main content
சன்டெக் சிட்டி விபத்தில் ஒருவர் பலி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சன்டெக் சிட்டி விபத்தில் ஒருவர் பலி - நிற்காமல் சென்ற கார் ஓட்டுநர் கைது

வாசிப்புநேரம் -
சன்டெக் சிட்டி விபத்தில் ஒருவர் பலி - நிற்காமல் சென்ற கார் ஓட்டுநர் கைது

படம்: 8 world

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.


சன்டெக் சிட்டியில் (Suntec City) நேர்ந்த விபத்தில் 43 வயது நபர் மாண்டார்.

மது அருந்திவிட்டு காரை ஓட்டிய சந்தேகத்தில் 38 வயது ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து நிக்கல் ரோட்டுக்கு (Nicoll Road) அருகில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

டான் சியௌ திங்ஃபெங் (Dan Xiao Tingfeng) என்ற நபர் நள்ளிரவு 12 மணியளவில், தனியார் வாடகைக் காருக்குக் காத்துக்கொண்டிருந்தார்.

சாலையைக் கடக்க முயன்றபோது டானை கார் மோதியதாகத் தெரியவந்தது.

ஆனால் ஓட்டுநர் காரை நிறுத்தாமல் சென்றுவிட்டார்.

ஜூலை 16ஆம் தேதி, நள்ளிரவு 12.40 மணிக்கு விபத்து குறித்து தகவல் கிடைத்ததாகக் காவல்துறை 8 World செய்தித்தளத்திடம் தெரிவித்தது.

டான் கவலைக்கிடமான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அது சொன்னது.

மருத்துவமனைக்கு நினைவிழந்த நிலையில் கொண்டு செல்லப்பட்ட அவர் பின்னர் இறந்தார்.

டானை மோதிய ஓட்டுநரைக் காவல்துறை கண்டுபிடித்தது.

விசாரணை நடக்கிறது.
 
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்