Skip to main content
உலகச் சிலம்பப் போட்டி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

உலகச் சிலம்பப் போட்டி - முதல் முறையாகப் பங்கேற்கும் சிங்கப்பூர்

வாசிப்புநேரம் -
உலகச் சிலம்பப் போட்டியில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து 37 பேர் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

சிங்கப்பூர் அணி முதல் முறையாக அந்தப் போட்டியில் கலந்துகொள்கிறது.

நான்காவது முறையாக நடக்கும் அந்தப் போட்டி இம்முறை இந்தியாவின் கேரள மாநிலத்தில் நடைபெறவுள்ளது.

போட்டிகள் நாளை மறுநாள் (4 செப்டம்பர்) முதல் 6ஆம் தேதி வரை நீடிக்கும்.
(படம்: சந்திரகாசன் கணேசன்)
அகில இந்தியச் சிலம்பச் சம்மேளனம் அந்தப் போட்டிக்கு ஏற்பாடு செய்கிறது.

இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் இன்னும் சில நாடுகள் போட்டியில் கலந்துகொள்ளவிருக்கின்றன.
(படம்: சந்திரகாசன் கணேசன்)
சிங்கப்பூரின் அனைத்துலகச் சிலம்பக் கழகம் போட்டியாளர்களுக்குக் கடும் பயிற்சி வழங்கிவருவதாகக் குழுவின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திரகாசன் கணேசன் (Sandhirakasan Ganesan) சொன்னார்.

பயிற்சிக்கு நேரத்தை ஒதுக்கக்கூடியவர்கள் மட்டும் போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டதாய் அவர் கூறினார்.
(படம்: சந்திரகாசன் கணேசன்)
போட்டியாளர்கள் வாரநாள்களில் 4 மணி நேரமும் வாரயிறுதில் 3 மணி நேரமும் பயிற்சிக்கு ஒதுக்க வேண்டும்.

ஆனால் அண்மைக் காலமாகப் போட்டிக்கு தயாராகும் வகையில் அவர்கள் அன்றாடம் பயிற்சிகளில் ஈடுபட்டனர்.
(படம்: சந்திரகாசன் கணேசன்)
கடந்த ஆண்டு (2023) டிசம்பர் மாதம் இந்தியாவில் நடந்த ஆசியச் சிலம்பப் போட்டியில் சிங்கப்பூர் மொத்தம் 30 பதக்கங்களை வென்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
(படம்: சந்திரகாசன் கணேசன்)
அதைப் போன்று இம்முறை நடக்கவிருக்கும் போட்டிகளிலும் சிங்கப்பூர் அணியை வெற்றிபெறச் செய்வது இலக்கு என்று திரு கணேசன் சொன்னார்.
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்