Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"5-11 வயதுடைய பிள்ளைகளில் 28%க்கு மட்டுமே கிருமித்தொற்றுக்கு எதிராகக் குறைந்தபட்ச பாதுகாப்பு உள்ளது"

வாசிப்புநேரம் -
"5-11 வயதுடைய பிள்ளைகளில் 28%க்கு மட்டுமே கிருமித்தொற்றுக்கு எதிராகக் குறைந்தபட்ச பாதுகாப்பு உள்ளது"

படம்: CNA/Hanidah Amin

சிங்கப்பூரில் 5 வயதுக்கும் 11 வயதுக்கும் இடைப்பட்ட பிள்ளைகளில் 28 விழுக்காட்டினருக்கு மட்டுமே கிருமித்தொற்றுக்கு எதிராகக் குறைந்தபட்ச பாதுகாப்பு இருப்பதாகச் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

குறைந்தபட்ச பாதுகாப்பு

5 வயதுக்கு மேற்பட்டோர் Pfizer-BioNTech அல்லது Moderna அல்லது Novavax தடுப்பூசியைக் குறைந்தது 3 முறை போட்டுக்கொண்டிருக்கவேண்டும்.

இரண்டாவது தடுப்பூசிக்கும் மூன்றாவது தடுப்பூசிக்கும் 5 மாத இடைவெளி இருக்கவேண்டும்.
சுருக்கமாகப் பார்க்க
இம்மாதம் 28ஆம் தேதி நிலவரப்படி சிங்கப்பூரில் 81 விழுக்காட்டினர் குறைந்தபட்ச பாதுகாப்பைக் கொண்டுள்ளனர்.
  • 5-11 வயது - 28%
  • 12-59 வயது - 87%
  • 60 வயதுக்குமேல் - 89%
கடந்த மாதம் 5ஆம் தேதியிலிருந்து மருத்துவமனையில் அன்றாடம் சராசரியாகச் சேர்க்கப்படும் COVID-19 நோயாளிகளின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்துள்ளது.

வாரந்தோறும் பதிவாகும் COVID-19 சம்பவங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

அமைச்சு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள்படி இம்மாதம் 16-ஆம் தேதி தொடங்கிய வாரத்தில்...

மருத்துவமனையில் சேர்க்கப்படுவோரின் அன்றாடச் சராசரி எண்ணிக்கை - 300க்கும் அதிகம்

COVID-19 சம்பவங்கள் - 27,000க்கும் அதிகம்

குறைந்தது 3 தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளும்போது கிருமித்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்படுவதைத் தடுக்கமுடியும் என்று சுகாதார அமைச்சு சொன்னது.
ஆதாரம் : Today

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்