ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது உயிரிழந்த பொதுமக்களுக்கு நினைவஞ்சலி
வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது உயிரிழந்த பொதுமக்களுக்கு இன்று நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் கிட்டத்தட்ட 500 பேர் கலந்துகொண்டனர்.
ஆண்டுதோறும் நடைபெறும் அந்நிகழ்ச்சி முழுமைத் தற்காப்பு தினத்தையும் குறிக்கிறது.
நிகழ்ச்சியில் வாசிக்கப்பட்ட பியூகல் இசை கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்தோரை நினைவுகூர்ந்தது.
சமயங்களுக்கு இடையிலான குழுக்கள், வர்த்தகத் தலைவர்கள், மாணவர்கள், முன்னாள் போர் வீரர்கள் உள்ளிட்டோர் இன்று போர் நினைவுப் பூங்காவில் கூடினர்.
கல்வியமைச்சர் டெஸ்மண்ட் லீ (Desmond Lee) நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
சிங்கப்பூரின் பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் தலைமுறைகளைக் கடந்து காப்பது நாட்டின் ஒட்டுமொத்தப் பொறுப்பு என்றார் அவர்.
அனைத்துலக ரீதியில் பூசல்கள் அதிகரிக்கும் வேளையில் சிங்கப்பூர் தொடர்ந்து வலுவாகவும் ஒற்றுமையாகவும் இருப்பது மேலும் முக்கியமாகிறது என்றும் அவர் கூறினார்.

ஆதாரம் : CNA