Skip to main content
பாசிர் பாஞ்சாங்கில் 509 கிலோ கஞ்சா
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பாசிர் பாஞ்சாங்கில் 509 கிலோ கஞ்சா

வாசிப்புநேரம் -
பாசிர் பாஞ்சாங்கில் 509 கிலோ கஞ்சா
படம்: Central Narcotics Bureau
வெளியீடு : 09 Jan 2026 06:50PM புதுப்பிப்பு : 09 Jan 2026 06:53PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பாசிர் பாஞ்சாங் சோதனை நிலையத்தில் 509 கிலோகிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஜனவரி 3ஆம் தேதி அது நடந்தது. கஞ்சா இருந்த கொள்கலனைப் பற்றி சிங்கப்பூர்ச் சுங்கத்துறைக்குத் தகவல் கிடைத்த பிறகு அது விரிவான சோதனைக்கு அனுப்பப்பட்டது. மத்தியப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவும் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையமும் இணைந்து சோதனையை நடத்தின. ஆணையத்தின் நிழற்படப் பகுப்பாய்வு ஊழியர்கள் சந்தேகப் பொருள் இருப்பதை அறிந்தனர். கொள்கலனில் பழுப்பு நிறப் பொட்டலங்கள் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 902 பொட்டலங்கள் பிடிபட்டன. சிங்கப்பூரிலிருந்து வேறொரு நாட்டுக்குக் கஞ்சாவை அனுப்பத் திட்டமிட்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. 500 கிராமுக்கும் அதிகமான கஞ்சாவைக் கடத்தினால் மரண தண்டனை விதிக்கப்படலாம்.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்