போதைப்பொருள் - 16 வயதுச் சிங்கப்பூர்ப் பெண் உட்பட 54 பேர் கைது
வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நடத்திய அதிரடிச் சோதனையில் போதைப் பொருள் புழங்கியதாக நம்பப்படும் 54 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதில் 16 வயதுப் பெண்ணும் கைது செய்யப்பட்டார். அவர் சிங்கப்பூரர்.
இம்மாதம் 24ஆம் தேதி தொடங்கிய அதிரடிச் சோதனை, நேற்று (29 நவம்பர்) முடிவடைந்தது.
சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்கள்:
- சுமார் 2,430 கிராம் போதைமிகு அபின் (heroin)
- 64 கிராம் ஐஸ் (‘Ice’)
- 723 கிராம் கஞ்சா
- 9 கிராம் கெட்டமைன் (ketamine)
- 38 எக்ஸ்டசி (Ecstasy) மாத்திரைகள்
- 94 Erimin-5 மாத்திரைகள்
- 2,034 ‘Tawon Liar’ மாத்திரைகள்
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களின் மதிப்பு சுமார் 286,000 வெள்ளி என்று மதிப்பிடப்படுகிறது.
நேற்று (29 நவம்பர்) மேற்கொண்ட நடவடிக்கையின்போது 60 வயது ஆடவர் வீட்டில் கத்தியை ஏந்தியபடி அதிகாரிகளை எதிர்கொண்டார்.
ஆடவரை அதிகாரிகள் விரைந்து அடக்கினர். ஆடவர் வீட்டின் கதவைத் திறக்க மறுத்ததால் அதிகாரிகள் பலவந்தமாக வீட்டுக்குள் புகுந்தனர்.
அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்கள்:
- சுமார் 2,395 கிராம் போதைமிகு அபின் (Heroin)
- 722 கிராம் கஞ்சா
- 25 கிராம் ஐஸ் ('Ice')
- 44 Erimin-5 மாத்திரைகள்
- 2 எக்ஸ்டசி (Ecstasy) மாத்திரைகள்
அவற்றின் மதிப்பு சுமார் 273,000 வெள்ளி.
புக்கிட் பாத்தோக் (Bukit Batok) ஹவ்காங் (Hougang) மார்சிலிங் (Marsiling) குயின்ஸ்டவுன் (Queenstown) யீசூன் (Yishun) ஆகிய வட்டாரங்களில் போதைப் புழங்கிகள் பிடிபட்டனர்.

ஆதாரம் : Others