Skip to main content
5.5 மில்லியன் பானக் கலன்கள் திருப்பிக் கொடுக்கப்பட்டன
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

5.5 மில்லியன் பானக் கலன்கள் திருப்பிக் கொடுக்கப்பட்டன

வாசிப்புநேரம் -
5.5 மில்லியன் பானக் கலன்கள் திருப்பிக் கொடுக்கப்பட்டன

(படம்: CNA/Syamil Sapari)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பானக் கலன்களைத் திருப்பிக் கொடுக்கும் திட்டம் தொடங்கியதிலிருந்து ஐந்தரை மில்லியன் கலன்கள் திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளன.

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி (Janil Puthucheary) அதனைத் தெரிவித்தார்.

திட்டம் ஏப்ரல் மாதம் நடப்புக்கு வந்தது.

சுமார் 1 மில்லியன் பரிவர்த்தனைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

திட்டத்தின் குறியீட்டை கொண்ட கூடுதல் பொருள்கள் சந்தைக்கு வரும்போது திரும்பக் கொடுக்கப்படும் கலன்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று டாக்டர் ஜனில் சொன்னார்.

திட்டத்தின்படி தகுதிபெறும் கலன்களை உரிய இயந்திரங்களில் கொடுக்கும்போது வாடிக்கையாளர்கள் 10 காசு வைப்புத் தொகையைத் திரும்பப் பெறுவர்.

தற்போது 1,070 இயந்திரங்கள் செயல்பாட்டில் உள்ளதாக டாக்டர் ஜனில் கூறினார்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்