ரம்பத்தைச் சுழற்றித் திரிந்தவர் - அதிர்வுக் கருவி மூலம் கட்டுப்படுத்தப்பட்டார்
வாசிப்புநேரம் -
காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்: Facebook/Singapore Incidents
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
பிடோக் நார்த்தில் ரம்பத்தைச் சுழற்றிக்கொண்டு அலைந்தவரை அதிர்வுக் கருவி மூலம் கட்டுப்படுத்தியதாகக் காவல்துறை அறிவித்திருக்கிறது.
நேற்று (ஜூலை 5) பிற்பகலில் சம்பவம் நடந்தது.
ரம்பத்தைக் கீழே போடும்படி அதிகாரிகள் பலமுறை எச்சரித்தும் அவர் அதைப் பொருட்படுத்தவில்லை.
அதிர்வுக் கருவி மூலம் கட்டுப்படுத்தப்பட்ட அவர் கைது செய்யப்பட்டார் என்று காவல்துறை சொன்னது.
அவர் போதைப்பொருள் உட்கொண்டிருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவத்தின் காணொளி இணையத்தில் பரவியது.
சுமார் 3.25 மணிக்கு உதவி கேட்டு அழைப்பு வந்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை 'செய்தி'யிடம் சொன்னது.
சுயநினைவுடன் இருந்த அவர் சாங்கி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஆதாரம் : Mediacorp Seithi