மோசடிகளில் ஈடுபட்டதாகச் சந்தேகம் - காவல்துறையின் அதிரடிச் சோதனையில் 579 பேர் சிக்கினர்
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட சந்தேகத்தில் 359 ஆண்கள் மற்றும் 220 பெண்களிடம் காவல்துறை விசாரணை நடத்துகிறது.
அவர்கள் 15 வயதுக்கும் 83 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியது, மின் வணிக மோசடி, ஆள்மாறாட்ட மோசடி, வேலை மோசடி முதலானவற்றில் அவர்கள் சம்பந்தப்பட்டதாக நம்பப்படுகிறது.
சுமார் 1,500 மோசடிச் சம்பவங்கள் இடம்பெற்றன.
பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 18 மில்லியன் வெள்ளியை இழந்தனர்.
வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவும் காவல்துறையின் ஏழு பிரிவுகளும் இரண்டு வாரச் சோதனையை நடத்தின.
இம்மாதம் இரண்டாம் தேதியிலிருந்து 15ஆம் தேதி வரை சோதனை நடத்தப்பட்டது.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டு வரை சிறைத்தண்டனை, 500,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மோசடிக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தது 6 பிரம்படிகள் விதிக்கப்படலாம்.

ஆதாரம் : Mediacorp Seithi