Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ரெட்ஹில் அடுக்குமாடி வீட்டில் கொலை - 59 வயது ஆடவர் மீது குற்றச்சாட்டு

வாசிப்புநேரம் -

ரெட்ஹில் குளோஸ் (Redhill Close) அடுக்குமாடி வீட்டில் நடந்த கொலை தொடர்பாக 59 வயது ஆடவர் மீது குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டிருக்கிறது. 

கொலைச் சம்பவம் மார்ச் 15ஆம் தேதி இரவு 11 மணிக்கும் மார்ச் 16ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கும்  இடையே நேர்ந்ததாக நம்பப்படுகிறது.

இங் பூன் ஹொங் (Ng Boon Hong) புளோக் 90இல் தம்மோடு வசித்த 61 வயது ஆடவரைக் கொலை செய்ததாகக் குற்றச்சாட்டு கூறுகிறது. 

தடுப்புக் காவலில் இருக்கும் அவர் காணொளி இணைப்பு மூலம் மாவட்ட நீதிமன்றத்தில் தோன்றினார். 

மனநலப் பரிசோதனைக்காக அவரை 3 வாரங்களுக்குச் சாங்கிச் சிறையில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். 

அடுத்த மாதம் 6ஆம் தேதியன்று அவர் மீண்டும் நீதிமன்றத்தில் தோன்றுவார்.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்