Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"6 நாள் பிள்ளைப் பராமரிப்பு விடுப்பு போதாது" - நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதம்

வாசிப்புநேரம் -
சம்பளத்துடன் கூடிய பிள்ளைப் பராமரிப்பு விடுப்பு அதிகரிக்கப்படவேண்டும் என்று சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தற்போது பெற்றோருக்குச் சம்பளத்துடன் கூடிய 6 நாள் பிள்ளைப் பராமரிப்பு விடுப்பு வழங்கப்படுகிறது.

2 பிள்ளைக்கு மேல் வைத்திருக்கும் பெற்றோருக்கு அது போதாது நாடாளுமன்ற உறுப்பினர் மரியம் ஜாபர் (Mariam Jaafar) கூறினார்.

வருமானம், தாத்தா பாட்டிமார், பணிப்பெண்கள், அக்கம்பக்கத்தினர் எனப் பல்வேறு வழிகளில் பெற்றோர் தீர்வுதேடுவதாக அவர் சொன்னார்.

பிள்ளைப் பராமரிப்பு விடுப்பை மேலும் மேம்படுத்துவதில் அரசாங்கம் மெதுவாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் இங்கும் (Louis Ng) பிள்ளைப் பராமரிப்பு விடுப்பை அதிகரிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என நம்புவதாகக் கூறினார்.

திருமணமாகாத, ஒற்றைப் பெற்றோருக்கும் கூடுதல் உதவி வழங்கப்படவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

குழந்தை போனசின் ரொக்கத்தொகை அவர்களுக்கும் வழங்கப்படவேண்டும் என்றார் திரு. இங்.

திருமணமாகாத பல ஒற்றைப் பெற்றோருக்கு அந்தப் பணம் உயிர்நாடி என்று அவர் குறிப்பிட்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்