$6 மில்லியன் மோசடி - 231 பேரிடம் விசாரணை
கோப்புப்படம்: AP
This audio is generated by an AI tool.
மோசடி செய்ததாகச் சந்தேகிக்கப்படும் 231 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.
அவர்களில் 66 பேர் பெண்கள். 165 பேர் ஆண்கள்.
அவர்கள் 14 வயதுக்கும் 84 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
கடந்த மாதம் 30ஆம் தேதிக்கும் இம்மாதம் 12ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் காவல்துறையினர் அதிரடிச் சோதனை நடத்தினர்.
231 பேரும் 900க்கும் அதிகமான மோசடிகளுக்கு உடந்தையாக இருந்ததாக அதிகாரிகள் சந்தேகித்தனர்.
அவற்றில் இணையவர்த்தக மோசடிகள், ஆள்மாறாட்ட மோசடிகள், வேலை மோசடிகள், வாடகை மோசடிகள் போன்றவை அடங்கும்.
மொத்தம் 6.35 மில்லியன் வெள்ளி ஏமாற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
ஏமாற்றியது, கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியது, உரிமமின்றிக் கட்டணச் சேவை வழங்கியது போன்ற குற்றங்களுக்காகச் சந்தேக நபர்கள் விசாரிக்கப்படுகின்றனர்.
குற்றவியல் சட்டப் பிரிவு 420இன் கீழ் மற்றவர்களை ஏமாற்றும் குற்றத்துக்கு 10 ஆண்டு வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.