Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உணவங்காடி நிலையங்களில் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் உணவருந்திய 6 பேருக்கு அபராதம்

வாசிப்புநேரம் -
உணவங்காடி நிலையங்களில் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் உணவருந்திய 6 பேருக்கு அபராதம்

(படம்: AFP/Roslan Rahman)

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு  முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 6 பேர் உணவங்காடி நிலையங்களில் உணவருந்துவதைக் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஒவ்வொருவருக்கும் 300 வெள்ளி அபராதம் விதிக்கப்படும் என்று அமைச்சு CNAவிடம் கூறியது.

உணவங்காடி நிலையங்களிலும் காப்பிக்கடைகளிலும் தடுப்பூசித் தகுதி அடிப்படையிலான  பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பது அவசியம்.

தடுப்பூசித் தகுதியை உறுதிசெய்வதற்குக் கடைகளில் சோதனைகள் நடத்தப்படாவிட்டாலும் அந்த நடைமுறை இன்னமும் நடப்பில் உள்ளது.

அதிகாரிகள் அவ்வப்போது சோதனைகளை மேற்கொள்வர் என்றும் விதிமுறைகளைப் பின்பற்றுவது வாடிக்கையாளர்களின் பொறுப்பு என்றும் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்