Skip to main content
Pearl's Hill பகுதியில் ஆக உயரமான BTO வீடுகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

Pearl's Hill பகுதியில் ஆக உயரமான BTO வீடுகள்

வாசிப்புநேரம் -
Pearl's Hill பகுதியில் ஆக உயரமான BTO வீடுகள்
(படம்: Ministry of National Development and Housing and Development Board)
பெர்ல்ஸ் ஹில் வட்டாரத்தில் சிங்கப்பூரின் ஆக உயரமான தேவைக்கேற்பக் கட்டப்படும் வீடுகள் (BTO) அமையவுள்ளன.

அவுட்ரம் பார்க் (Outram Park) MRT நிலையத்துக்குப் பக்கத்தில் உள்ளது பெர்ல்ஸ் ஹில்.

Pearl’s Hill City பூங்காவில் முன்பு இருந்த Outram Park Complex தளத்தில் 60 மாடியைவிட உயரமான புதிய வீடுகள் வருகின்றன.

அங்கு 40 ஆண்டில் முதல் BTO கட்டுமானமாக அது அமையும்.

தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் (Chee Hong Tat) அதனை இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இரண்டு அறை flexi, 3 அறை, 4 அறை வீடுகள் எனச் சுமார் 1,700 வீடுகள் அங்குக் கட்டப்படும். 140 பொது வாடகை வீடுகளும் அங்கு அமையவுள்ளன.

எங்கெங்குச் சாத்தியமோ அங்கெல்லாம் உயரமான அடுக்குமாடி வீடுகள் கட்டுவதன் மூலம் கூடுதல் வீடுகள் கட்டுவது இலக்கு என்றார் அமைச்சர் சீ.

40 மாடி கட்டடங்களைவிட 60 மாடிக் கட்டடத்தில் 50 விழுக்காடு அதிக வீடுகளைக் கட்ட முடியும்.

இதுவரை 50 மாடி வீடுகளைக் கொண்டுள்ள Pinnacle@Duxton, சிங்கப்பூரின் ஆக உயரமான HDB வீடுகளாகத் திகழ்கின்றன.

இனி அந்தப் பெருமையை பெர்ல்ஸ் ஹில் பெறவுள்ளது.

பெர்ல்ஸ் ஹில் வட்டாரத்தில் 10 ஆண்டில் சுமார் 6,000 வீடுகள் கட்டப்படும் என்று 2023இல் அறிவிக்கப்பட்டது.
 
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்