வேலை மோசடியில் $97 மில்லியன் பணத்தைப் பறிகொடுத்த 6,600 பேர்
வாசிப்புநேரம் -

(படம்: Envato Elements)
வேலை மோசடிக் கும்பல்கள் பல உத்திகளைப் பயன்படுத்திப் பொதுமக்களை ஏமாற்றி வருகின்றன.
இந்த ஆண்டு (2023) ஜனவரி தொடங்கி இப்போதுவரை குறைந்தது 6,600 பேர் வேலை மோசடிக் கும்பலிடம் பணத்தைப் பறிகொடுத்தனர்.
அதனால் ஏற்பட்ட நட்டம் 96.8 மில்லியன் வெள்ளி என்றது சிங்கப்பூர்க் காவல்துறை.
மோசடிக் கும்பலின் உத்தி?
மோசடிக்காரர்கள் முதலில் சிறு ஆய்வில் பங்கேற்குமாறு WhatsApp அல்லது Telegramஇல் தகவல் அனுப்புவார்கள்.
அதை முடிப்பவருக்குச் சிறு தொகையைச் சம்பளமாகக் கொடுப்பார்கள்.
இன்னும் நிறைய சம்பாதிக்கலாம் என்றுகூறி, மற்றொரு WhatsApp அல்லது Telegram குழுவில் அவர்களை இணைத்துக்கொள்வார்கள்.
அதில் கொடுக்கப்படும் வேலையின் ஒருபகுதியாக மோசடிக் கும்பல் கொடுக்கும் வங்கிக் கணக்கில் பணத்தைப் போட வேண்டும்.
செய்த வேலைக்கான சம்பளம் கைக்கு வராதபோதுதான் மோசடிக்காரர்களால் ஏமாற்றப்பட்டதைப் பெரும்பாலானவர்கள் உணர்வதாகக் காவல்துறை கூறியது.
எனவே இணையம்வழி வேலை இருப்பதாகக் கூறி ஏமாற்றிப் பணம் பறிக்கும் மோசடிக் கும்பலிடம் கவனமாக இருக்குமாறு காவல்துறை எச்சரித்துள்ளது.
சந்தேகம் எழுந்தால் 999 என்ற எண்ணில் காவல்துறையை அழைக்கலாம்.

ஆதாரம் : Mediacorp Seithi