Skip to main content
புக்கிட் பாஞ்சாங் LRT தடத்தில் விழுந்த 68 வயது ஆடவர் மரணம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

புக்கிட் பாஞ்சாங் LRT தடத்தில் விழுந்த 68 வயது ஆடவர் மரணம்

வாசிப்புநேரம் -

புக்கிட் பாஞ்சாங் (Bukit Panjang) இலகு ரயில் சேவைத் தடத்தில் விழுந்த ஆடவர் மாண்டார்.

அந்த 68 வயது ஆடவர் தடத்தில் வந்துகொண்டிருந்த ரயிலின் முன்பு விழுந்தார்.

சம்பவம் குறித்துக் காலை 5.50 மணிக்கு அழைப்புக் கிடைத்ததாகக் காவல்துறை சொன்னது.

ஆடவர் காலை 5 மணிக்குத் தடத்தில் விழுந்ததாக ஆரம்பக் கட்ட விசாரணை காட்டுவதாக அதிகாரிகள் கூறினர்.

அசைவற்றுக்கிடந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை சொன்னது.

ஆடவரின் மரணத்தில் சூது எதுவும் இல்லை என்றது காவல்துறை.

விசாரணை நடைபெறுகிறது.

சம்பவத்தை அடுத்து அந்த LRT தடத்தில் ரயில் சேவை தடைபட்டது.

குறிப்பாக புக்கிட் பாஞ்சாங்- செஞ்சா (Bukit Panjang - Senja) நிலையங்களுக்கு இடையே பெரிய அளவில் தாமதம் ஏற்பட்டதாக SMRT தெரிவித்தது.

எனினும் சுவா சூ காங் - புக்கிட் பாஞ்சாங் (Choa Chu Kang - Bukit Panjang) நிலையங்களுக்கு இடையே ரயில் சேவை தொடர்கிறது.

பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவ இலவசப் பேருந்துச் சேவை ஏற்பாடு செய்யப்பட்டது.

இலகு ரயில் சேவை வழக்கநிலைக்குத் திரும்பியிருக்கிறது.

ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்