Skip to main content
சௌத் பிரிட்ஜ் ரோட்டில் விபத்து
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சௌத் பிரிட்ஜ் ரோட்டில் விபத்து - 6 வயதுச் சிறுமி மரணம்

வாசிப்புநேரம் -
சௌத் பிரிட்ஜ் ரோட்டில் விபத்து - 6 வயதுச் சிறுமி மரணம்
படம்: Google Street View
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சௌத் பிரிட்ஜ் ரோட்டில் (South Bridge Road) இருக்கும் Buddha Tooth Relic ஆலயத்திற்கு வெளியே விபத்து நடந்துள்ளது.

நேற்று (பிப்ரவரி 6) காலை சுமார் 11.50 மணிக்கு விபத்தைப் பற்றித் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் காவல்துறை 'செய்தி'யிடம் கூறியது.

விபத்தில் 31 வயதுப் பெண்ணும் அவருடைய 6 வயது மகளும் சிக்கினர்.

இருவரும் நினைவுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் பின்னர் மகள் உயிரிழந்தார்.

விபத்தைப் பற்றி நேற்றுக் காலை SG Road Vigilante Facebook பக்கத்தில் பதிவிடப்பட்டது. கார் நிறுத்துமிடத்திலிருந்து வெளியே காரை ஓட்டி வந்தவர் அந்த இருவரையும் இடித்து அவர்கள் மேல் காரை ஏற்றியதாகப் பதிவில் குறிப்பிடப்பட்டது.

காவல்துறை விசாரணை தொடர்கிறது. 38 வயதுப் பெண் ஓட்டுநர் விசாரணையில் உதவி வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்