Healing the Divide குழுவுடன் தொடர்புடைய மருத்துவர் ஜிப்சன் குவா மீது புதிய குற்றச்சாட்டுகள்
வாசிப்புநேரம் -

Facebook / Jipson Quah
Healing the Divide குழுவுடன் தொடர்புடைய மருத்துவர் ஜிப்சன் குவா (Jipson Quah) மீது புதிதாக 7 குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
COVID-19 தடுப்பூசிக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர் குவா. தற்போது அவர் 17 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
அவை அனைத்தும் தவறான பிரதிநிதித்துவம் மூலம் ஏமாற்றியது தொடர்பானவை.
தடுப்பூசி போட்டுக் கொள்ளாதோருக்கு அவர்கள் Sino-pharm தடுப்பூசி போட்டுக்கொண்டதாகச் சான்றளிக்கப்பட்டது.
Healing the Divide நிறுவனர் ஐரிஸ் கோவுடன் (Iris Koh) இணைந்து அந்தச் சதியில் ஈடுபட்டதாகக் குவா மீதான குற்றச்சாட்டுகளில் சிலவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன.
விசாரணைக்கு முந்திய சந்திப்புக்காக அடுத்த மாதம் குவா நீதிமன்றத்துக்குத் திரும்புவார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 20 ஆண்டு சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

ஆதாரம் : CNA