உடம்புப் பிடிப்பு நிலையங்கள் - 7 பெண்களிடம் விசாரணை
வாசிப்புநேரம் -
உடம்புப் பிடிப்பு நிலையங்களில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் 7 பெண்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
அவர்கள் 32 வயதுக்கும் 43 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
நேற்று (12 பிப்ரவரி) சைனாடவுன் வட்டாரத்தில் உள்ள People's Park Centre, People’s Park Complex ஆகியவற்றிலும் சையிது அல்வி ரோட்டிலும் (Syed Alwi Road) அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது.
சோதிக்கப்பட்ட 10 உடம்புப் பிடிப்பு நிலையங்களில் 9 உரிமம் இல்லாமல் செயல்பட்டதாகக் காவல்துறையினர் கூறினர்.
உரிமம் இல்லாமல் செயல்பட்ட 5 நிலையங்களில் சட்டவிரோத நடவடிக்கைகள் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வீடமைப்புப் பேட்டைகளில் சட்டவிரோத நடவடிக்கைகளை ஒடுக்கும் முயற்சியின் ஓர் அங்கமாகச் சோதனை நடத்தப்பட்டது.

ஆதாரம் : Mediacorp Seithi