Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

90 வயது முதியவரைக் கீழே தள்ளிய 73 வயது ஆடவர்... முதியவர் மரணம்... ஆடவருக்குச் சிறைத்தண்டனை...

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் 90 வயது முதியவரைக் கீழே தள்ளி அவர் மரணத்திற்குக் காரணமான 73 வயது ஆடவருக்கு 28 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திரு சூ சின் நாம் (Choo Chin Nam) என்ற அந்த முதியவர், தலையில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக மருத்துவமனையில் மாண்டதாகக் கூறப்பட்டது.

திரு சூவிற்கு முதுமை மறதி நோய் இருந்ததாக நம்பப்படுகிறது.

அவரும் அவர் மரணத்திற்குக் காரணமான தோ டெக் சாயும் (Toh Teck Chye) முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள் என்றும் கூறப்பட்டது.

சம்பவம் 2023ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி காலை 11.30 மணியளவில் மார்சிலிங் ரோட் கழக புளோக் 3க்கு அருகே நடந்தது.

திரு சூ, புளோக்கின் வெற்றுத்தளத்தில் மூத்தோருக்கான நடவடிக்கை நிலையத்திற்கு வெளியே அமர்ந்திருந்தார்.

அவர் அந்த வழியாக நடந்துசென்ற தோவைப் பார்த்து 100 வெள்ளி கடனைத் திரும்பித் தரவேண்டும் என்று கத்தினார்.

இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தோ, திரு சூவின் கைத்தடியைப் பிடித்து இழுத்து அவரைக் கீழே தள்ளினார்.

திரு சூ தலையில் அடிபட்டு அசைவின்றிக் கிடந்தார். அவருக்கு உதவாமல் தோ அங்கிருந்து சென்று பின்னர் மீண்டும் திரும்பிவந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றித் திரு சூ மரணமடைந்த பிறகு காவல்துறைக்குச் சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டது.

கண்காணிப்புக் கேமரா பதிவுகளின் மூலம் அடையாளம் காணப்பட்ட தோவைக் காவல்துறை மறுநாள் (16 அக்டோபர் 2023) கைதுசெய்தது.

தோவிற்கு அதிகபட்சமாக 5 ஆண்டுச் சிறைத்தண்டனை, 10,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட்டிருக்கலாம்.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்