Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

75 கிலோமீட்டர் நீளமுள்ள சுற்றுத்தீவுப் பாதையின் முதல் கட்டம் திறக்கப்பட்டது

வாசிப்புநேரம் -

சுற்றுத்தீவுப் பாதையின் 75 கிலோமீட்டர் நீளமுள்ள பசுமை நடைபாதை இன்று பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது.

அது குறித்து தேசியப் பூங்கா கழகம் (NParks) அறிவித்துள்ளது.

செலேட்டாரில் (Seletar) உள்ள ரோவர்ஸ் பே பூங்காவிலிருந்து (Rower’s Bay Park), லாப்ரடோர் பூங்காவிற்கு (Labrador Park) அருகிலுள்ள பெர்லேயர் க்ரீ (Berlayer Cree) வரை இந்த பசுமை நடைபாதை அமைந்துள்ளது.

துணைப்பிரதமர் ஹெங் சுவீ கியெட் (Heng Swee Keat), தேசிய வளர்ச்சி, நிதி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா, ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி ஆலோசகர் டாக்டர் மாலிகி ஒஸ்மான் ஆகியோர் புதிய நடைபாதையைப் பார்வையிட்டனர்.

திட்டம் குறித்து 2012ஆம் ஆண்டு முதன்முதலில் அறிவிக்கப்பட்டது. சுற்றுத்தீவுப் பாதையானது (Round Island Route) தீவைச் சுற்றியிருக்கும் மிக நீளமான பொழுதுபோக்கு இணைப்பாக இருக்கும்.

2035ஆம் ஆண்டிற்குள், 8 வெவ்வேறு பாதைகளை உள்ளடக்கிய, 360 கிலோமீட்டர் தூரம் கொண்ட பொழுதுபோக்கிற்கான இணைப்புப் பாதையை உருவாக்குவது கழகத்தின் திட்டம்.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்