பாலஸ்தீன ஆதரவுப் பேரணி - 8 சம்பவங்கள் விசாரணை
(படம்: Students For Palestine Singapore)
This audio is generated by an AI tool.
இஸ்ரேல்-ஹமாஸ் சண்டை தொடர்பில் சிங்கப்பூரில் நடத்தப்பட்ட 8 பேரணிகள் குறித்துக் காவல்துறை விசாரித்துள்ளது.
அனைத்துச் சம்பவங்களிலும் சம்பந்தப்பட்ட நபர்கள் பாலஸ்தீனத் தரப்புக்கு ஆதரவு தெரிவித்தனர்.
உள்துறை அமைச்சரும் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு கா சண்முகம் அந்த விவரத்தைத் தந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஃபட்லி ஃபவுஸி (Fadli Fawzi) கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் பதில் சொன்னார்.
2023ஆம் ஆண்டு அக்டோபர் முதல் இஸ்ரேல் அல்லது பாலஸ்தீன வட்டாரத்துக்கு ஆதரவு தெரிவித்தது தொடர்பில் எத்தனை புகார்கள் பதிவாகின என்று திரு ஃபட்லி வினவினார்.
விசாரணையின் முடிவுகள் பற்றியும் அவர் கேட்டார்.
தற்போது நான்கு சம்பவங்கள் குறித்துக் காவல்துறையின் விசாரணை தொடர்வதாக அமைச்சர் சொன்னார்.
மேலும் மூன்று சம்பவங்களில் சம்பந்தப்பட்ட நபர்களுக்குக் காவல்துறை எச்சரிக்கை விடுத்தது.
எஞ்சிய ஒரு விவகாரத்தில் நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்தது.
எனினும் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் மேல்முறையீடு செய்யத் திட்டமிடுகிறது.
பேரணி நடத்தியவர்கள் பாலஸ்தீனத் தரப்பை ஆதரித்ததற்காக விசாரிக்கப்படவில்லை; பொது ஒழுங்குச் சட்டத்தை மீறினார்களா என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.