வேலையில் நீக்குப்போக்கு - "80% நிறுவனங்கள் தயார்"
சிங்கப்பூரில் 80 விழுக்காட்டு நிறுவனங்கள் நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளுக்குத் தயாராய் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்புர் தேசிய முதலாளிகள் சம்மேளனம் அதனைத் தெரிவித்தது.
சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்துடன் நடத்தப்பட்ட ஆய்வில் அது தெரியவந்ததாகக் கூறப்பட்டது.
நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளுக்கான வழிகாட்டி நெறிமுறைகள் இவ்வாண்டின் தொடக்கத்தில் வெளிவந்தன.
அதன் பிறகு சம்மேளனம் நிறுவனங்களுக்குப் பயிலரங்குகளை நடத்திவருகிறது.
முத்தரப்புப் பங்காளிகளான தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸுடனும் மனிதவள அமைச்சுடனும் சேர்ந்து சம்மேளனம் நிறுவனங்களிடமும் ஊழியர்களிடமும் -பேசியதாகக் கூறியது.
சம்மேளனத்தின் 3,700 நிறுவனங்களுக்காக வழிகாட்டிப் புத்தகமொன்றும் வெளியிடப்பட்டது.
வரும் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து (1 டிசம்பர்) நீக்குப்போக்கான வேலை ஏற்பாட்டை வழங்க எல்லா நிறுவனங்களும் செயல்முறைகளைக் கொண்டிருக்கவேண்டும்.
நிறுவனங்கள் அவற்றைக் கடைப்பிடிக்காவிட்டால், மனிதவள அமைச்சு எச்சரிக்கைகளை விடுக்கக்கூடும்.