Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கொலை வழக்கில் 5 ஆண்டுக்குக் குறைவாக தண்டனை விதிக்கும்படி நீதிமன்றத்தில் ரகளை செய்த முதியவர்

வாசிப்புநேரம் -
கொலை வழக்கில் 5 ஆண்டுக்குக் குறைவாக தண்டனை விதிக்கும்படி நீதிமன்றத்தில் ரகளை செய்த முதியவர்

(படம்: Unsplash)

நீதிமன்றத்தில் கொலை வழக்கு விசாரணை ஒன்றில் 85 வயது முதியவர் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையைக் குறைக்கும்படி ரகளை செய்திருக்கிறார். 

85 வயது பாக் கியான் ஹுவாட் (Pak Kian Huat)என்ற அந்த முதியவர் தம்முடன் வாழ்ந்துவந்த 79 வயது லிம் சோய் மொய்யை (Lim Soi Moy) 2019ஆம் ஆண்டு வெட்டிக்கொன்றார். 

இருவரும் ஒன்றாக வாழ்ந்துவந்தனர். அவர்களுக்கு 4 பிள்ளைகள். ஆனால் அவர்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை. 

முதலில் அவர்மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது. பின்னர் அதை நோக்கமில்லாக் கொலையாகக் குறைப்பது குறித்துப் பரிசீலிப்பதாக அரசாங்க வழக்கறிஞர் சொன்னார்.

ஆனால் வழக்கில் முன்வைக்கப்பட்ட கூற்றுகள் பலவற்றை முதியவர் மறுத்து ரகளை செய்தார். 

இதனால் முதலில் அவர்மீது விதிக்கப்பட்ட கொலைக் குற்றச்சாட்டையே கருத்தில் எடுத்துக்கொள்வதா அல்லது அவரது மேல்முறையீட்டை ஏற்பதா என்பதை முடிவு செய்யவேண்டும் என்று அரசாங்கத் தரப்பு சொன்னது. 

கொலைக் குற்றச்சாட்டுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். 

தம்மால் 5 ஆண்டுகளுக்குமேல் சிறையில் கழிக்கமுடியாது என்று முதியவர் வாதிட்டார். அதற்கு மரண தண்டனையே மேல் என்றார் அவர். 

ஒரு கட்டத்தில் முதியவர் கூச்சலிடத் தொடங்கினார். 

அவரை ஒழுங்குடன் நடந்துகொள்ளும்படி நீதிபதி எச்சரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. 

வழக்கு 3 வாரங்களுக்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

ஆதாரம் : CNA/ll(gr)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa