துணையைக் கொலை செய்த 86 வயது ஆடவருக்கு 15 ஆண்டுகள் சிறை
வாசிப்புநேரம் -

(கோப்புப் படம்: AFP/Roslan Rahman)
கடந்த 2019ஆம் ஆண்டு தமது துணையைக் கொன்ற குற்றத்தை ஒப்புக்கொண்ட 86 வயது ஆடவருக்கு இன்று (22 மே)
15 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பாக் கியான் ஹூவாட் (Pak Kian Huat) எனும் அந்த ஆடவர் லிம் சோய் மோய் (Lim Soi Moy) எனும் 79 வயதுப் பெண்ணைப் பாரங்கத்தியால் வெட்டிக் கொன்றார்.
சம்பவம் HDB வீடொன்றில் நடந்தது. எந்தப் படுக்கையறையில் யார் உறங்குவது என்பதில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிக் கொல்லும் வரை சென்றது.
முதலில் கொலைக் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்த பாக் பின்னர் மரணம் விளைவித்ததாகக் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
அவருக்குத் தண்டனை விதித்த நீதிபதி சீ கீ ஊன் (See Kee Oon) மிகவும் கொடூரமான முறையில் பெண் தாக்கப்பட்டதைச் சுட்டினார்.
மரணம் விளைவித்த குற்றத்திற்குப் பிரம்படியுடன் கூடிய ஆயுள்தண்டனை அல்லது அபராதம், பிரம்படியுடன் கூடிய 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
50 வயதுக்கு மேற்பட்ட குற்றவாளிகளுக்குப் பிரம்படி கிடையாது.