Skip to main content
தீவெங்கும் சோதனை, போதைப் பொருள் பறிமுதல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

தீவெங்கும் சோதனை, போதைப் பொருள் பறிமுதல் - 88 பேர் கைது

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மத்தியப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, தீவெங்கிலும் நடத்திய திடீர்ச் சோதனையில் 88 பேரைக் கைது செய்துள்ளது.

பிடோக், உட்லண்ட்ஸ், ரேஸ் கோர்ஸ் ரோட் (Race Course Road), தெலோக் குராவ் (Telok Kurau) ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இம்மாதம் 11ஆம் தேதி முதல் இன்று வரை சோதனை மேற்கொள்ளப்பட்டது.

213 கிராம் கஞ்சா, 170 கிராம் ஐஸ், ஒரு கிராம் heroin, 5 Ecstasy மாத்திரைகள், 23 Erimin-5 மாத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

அவற்றின் மொத்த மதிப்பு 23,000 வெள்ளிக்கும் அதிகம்.

மின்-சிகரெட்களும் அவற்றுடன் தொடர்புடைய etomidate ரசாயனம் கொண்ட 37 உபரிப் பொருள்களும் கண்டெடுக்கப்பட்டன.

அதன் மதிப்பு 1,100 வெள்ளிக்கும் அதிகம் என்று பிரிவு தெரிவித்தது.

விசாரணை தொடர்கிறது.

 

ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்