மனைவியைக் கொன்ற 90 வயது முதியவருக்கு 5 ஆண்டு கணிப்புச் சிறைத்தண்டனை
வாசிப்புநேரம் -
கோப்புப் படம்: CNA/Jeremy Long
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் மனைவியைக் கொன்ற மனநலம் பாதிக்கப்பட்ட முதியவருக்கு 5 ஆண்டு கணிப்புச் சிறைக்காலத் தண்டனைவிதிக்கப்பட்டுள்ளது.
அவர் ரிடாவி மோர்சுடின் (Ridawi Morsudin) எனும் 90 வயது முதியவர்.
கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமது 74 வயது மனைவியை அவர் கொன்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது அவருக்கு மறதிநோய் இருந்தது. தற்காலிகக் குழப்ப நிலையிலும் அவர் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ரிடாவி நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளவோ, குற்றத்தை ஒப்புக்கொள்ளவோ தகுதியற்றவர் என்று மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன.
தனக்காக வாதிடும் திறனும் அவருக்கு இல்லை.
அன்றாட வேலைகளைச் செய்யவே அவருக்கு அதிக உதவி தேவைப்படுவதால் அவர் மீண்டும் குற்றம் புரியும் வாய்ப்பு குறைவு என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும், பாதுகாப்பைக் கருத்தில்கொள்ள வேண்டியிருப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
5 ஆண்டு காலம் என்பது ரிடாவிக்கு நேரடியாக விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை அல்ல.
குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தால் அவர் அனுபவித்திருக்கக்கூடிய சிறைத்தண்டனையை நீதிமன்றம் கணிப்பாக நிர்ணயித்துள்ளது.
அவரைத் தொடர்ந்து காவலில் வைப்பதா நிபந்தனைகளுடன் விடுவிப்பதா என்பதைச் சம்பந்தப்பட்ட அமைச்சர் பின்னர் முடிவு செய்வார்.
மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் குற்றஞ்சாட்டப்படுபவர்கள் தொடர்பான சட்டத் திருத்தம் 2025 பிப்ரவரியில் நடப்புக்கு வந்தது.
அதன் பிறகு சிங்கப்பூரில் நடைபெறும் முதல் வழக்கு விசாரணை இது என்று நம்பப்படுகிறது.

ஆதாரம் : CNA