உள்ளூர் நிறுவனத்துக்குத் தோள் கொடுத்துத் தூக்கிவிட்ட பன்னாட்டு நிறுவனம்
கிருமித்தொற்றுச் சூழலால் உலக அளவில் பல நிறுவனங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
கிருமித்தொற்றுச் சூழலால் உலக அளவில் பல நிறுவனங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
முடக்கநிலை, பயணக் கட்டுப்பாடுகள், வேலை இழப்பு ஆகியவை நிறுவனங்களின் வருமானத்தில் சரிவை ஏற்படுத்தியுள்ளன.
இந்தக் கடினமான காலக்கட்டத்தில், 12 சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவ 12 பன்னாட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
சமூகத்திற்குத் திருப்பி கொடுக்கும் நோக்கில் சிங்கப்பூரில் உள்ள சுவீடன் தூதரகம் அந்தத் திட்டத்தை அறிமுகம் செய்தது.
அத்திட்டத்தினால் பயன்பெற்ற ஒரே இந்திய நிறுவனமான ஆர்யா கிரியேஷன்ஸ், AstraZeneca பன்னாட்டு நிறுவனத்தின் உதவியைப் பெற்றது.
அதைப் பற்றி நிறுவனத்தின் நிறுவனர் திருவாட்டி பிரேமா மகாலிங்கம் 'செய்தி'யுடன் பகிர்ந்துகொண்டார்.
அதை அடுத்து, வெளிநாட்டு ஊழியர்களுக்கான கதை சொல்லும் போட்டி ஒன்றும் AstraZeneca உதவியுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் திருவாட்டி பிரேமா குறிப்பிட்டார்.
இம்மாதம் 22ஆம் தேதி நிறைவு பெறவுள்ள அந்தப் போட்டிக்கான பரிசுகளின் ஆதரவாளர்கள் AstraZeneca. நிறுவனத்தின் எந்தத் தேவைக்கும் கைகொடுக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள்
என்று அவர் தெரிவித்தார்.
தக்க சமயத்தில் கிடைத்த உதவியால், இன்று நிமிர்ந்து நிற்கிறது ஆர்யா கிரியேஷன்ஸ்.