வரி நிவாரணத்தைக் கணக்கிட்டதில் தவறு- 15,000 பேரின் வரித்தொகையில் மாற்றம்
வாசிப்புநேரம் -
படம்: CNA/Jeremy Long
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
தேசிய சேவையாளர்களுக்குக் கொடுக்கப்படும்
நிவாரணத் தொகையின் கணக்கீட்டில் தவறு ஏற்பட்டதால் சுமார் 15,000 பேரின் வரித்தொகையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தேசிய சேவையாளர்கள், அவர்களது பெற்றோர், வாழ்க்கைத் துணை உட்பட வரி செலுத்தும் சுமார் 15,000 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்காப்பு அமைச்சின் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாற்றால் தவறான தேசிய சேவை நடவடிக்கைப் பதிவுகள் உருவாக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்தப் பதிவுகளைக் கொண்டு தேசிய சேவையாளர்களுக்கான வரி நிவாரணத் தொகை கணக்கிடப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.
2025, 2026 மதிப்பீட்டு ஆண்டுகளில், தவறான வரி நிவாரணத் தொகைகள் வழங்கப்பட்டதாகத் தற்காப்பு அமைச்சும், சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையமும் தெரிவித்தன.
பாதிக்கப்பட்ட 15,000 பேரில், சுமார் 7,000 பேரின் வரித் தொகை அதிகரிக்கும்; சுமார் 8,000 பேரின் வரித் தொகை குறையும்.
மொத்தம் சுமார் 930,000 வெள்ளி மீட்கப்படும், சுமார் 995,000 வெள்ளி திருப்பித் தரப்படும்.
பாதிக்கப்பட்டவர்களின் கணக்குகளில் சரியான நிவாரணத் தொகை பிரதிபலிக்கப்படுவதை உறுதிசெய்ய சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்துடன் இணைந்து பணியாற்றியதாகத் தற்காப்பு அமைச்சு சொன்னது.
இது குறித்து பாதிக்கப்பட்ட அனைத்து தேசிய சேவையாளர்களுக்கும் தகவல் அளித்துவிட்டதாகவும், வரி நிவாரணத் தொகையில் ஏற்பட்ட தவறுகள் திருத்தப்பட்டுவிட்டதாகவும் அது தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட மதிப்பீட்டு அறிக்கைகளைத் திருத்துவதாக சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் சொன்னது.
இம்மாதத்திற்குள் அந்த திருத்தப்பட்ட அறிக்கைகள் பாதிக்கப்பட்டோருக்குக் கொடுக்கப்படும் என்றும் அது சொன்னது.

ஆதாரம் : CNA