சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் 46,000 பயண முன்பதிவு விவரங்கள் கசிந்தன
(கோப்புப் படம்: Reuters/Edgar Su)
This audio is generated by an AI tool.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சுமார் 46,000 பயண முன்பதிவு விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.
மென்பொருள் சேவை வழங்கும் Amadeus நிறுவனத்தின் தளம் ஊடுருவப்பட்டது.
பயணிகளின் பெயர்கள், முன்பதிவு எண்கள், பயண விவரங்கள் உள்ளிட்ட தகவல்கள் கசிந்தன.
சுமார் 620 முன்பதிவுகளில் தொடர்பு விவரங்கள், பயண ஆவணத் தகவல்கள், KrisFlyer உறுப்பினர் எண்கள் ஆகியவையும் கசிந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கணினிக் கட்டமைப்பு ஊடுருவப்படவில்லை என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்தது.
வங்கிக் கணக்கு, கடன்பற்று அட்டை விவரங்கள் கசியவில்லை.
பாதிக்கப்பட்ட பயணிகளிடம் மன்னிப்புக் கேட்டுகொண்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அவர்களின் முன்பதிவு எண்களை மாற்ற நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தது.
Amadeus நிறுவனத்தில் ஏற்பட்ட இணைய ஊடுருவலால் மேலும் சில விமான நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
கேத்தே பசிபிக் ஏர்வைஸ் (Cathay Pacific Airways), மலேசிய ஏர்லைன்ஸ் (Malaysia Airlines) ஜப்பான் ஏர்லைன்ஸ் (Japan Airlines), ஆசியானா ஏர்லைன்ஸ் (Asiana Airlines) ஆகியன அவற்றில் அடங்கும்.