அப்பர் சிராங்கூன் அருகே வேலியில் மோதிக் கவிழ்ந்த கார்
This audio is generated by an AI tool.
அப்பர் சிராங்கூன் அருகே வேலியை மோதிக் கார் ஒன்று கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
'செய்தி' நேயர் அந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டார்.
அவர் பகிர்ந்த படங்களில் அந்தக் கார் Tribe Car எனும் கார் பகிர்வு நிறுவனத்திற்குச் சொந்தமானது என்று தெரிகிறது.
சம்பவ இடத்தில் காவல்துறை அதிகாரிகள் இருப்பதாக 'செய்தி' நேயர் தெரிவித்தார்.
விபத்து நடந்ததாகக் கூறப்படும் லோரோங் லியூ லியெனின் (Lorong Lew Lian) ஒரு பகுதி மூடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விபத்து குறித்து மேலும் தகவல்களை அறிய 'செய்தி' சிங்கப்பூர்க் காவல்துறையையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையையும் தொடர்புகொண்டுள்ளது.
இரவு சுமார் 7.10 மணி அளவில் விபத்தைப் பற்றி தகவல் கிடைத்ததாகவும், ஒருவர் டான் டொக் செங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் குடிமைத் தற்காப்புப் படை 'செய்தி'யிடம் கூறியது.
மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டவர் 37 வயதுப் பெண் என்று சிங்கப்பூர்க் காவல்துறை 'செய்தி'யிடம் கூறியது. மேலும், காரை ஓட்டிய 19 வயது ஆடவர் விசாரணைக்கு உதவி வருவதாகவும் சொன்னது.