உயிருடற்சேதத்தை ஏற்படுத்தும் விபத்துகள் அதிகரித்தன
வாசிப்புநேரம் -
படம்: CNA/Jeremy Long
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் உயிருடற்சேதத்தை ஏற்படுத்தும் விபத்துகள் அதிகரித்துள்ளன.
மூத்த அமைச்சர் கா சண்முகம் அந்த விவரத்தைத் தந்தார்.
2024 முதல் எத்தனை விபத்துகள் நடந்தன, அவற்றுக்கான காரணம் என்ன என்று நாடாளுமன்ற உறுப்பினர் இங் ஷி சுவான் (Ng Shi Xuan) கேள்வியெழுப்பினார்.
அதற்கு அமைச்சர் சண்முகம் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.
2024இல் 14,168 விபத்துகள் உயிருடற்சேதம் விளைவித்தவை.
கடந்த ஆண்டில் அந்த எண்ணிக்கை 15,292.
இரண்டு ஆண்டுகளிலும் கார் விபத்துகளே அதிகம்.
2024ஆம் ஆண்டு 6,535 கார்கள் விபத்தில் சிக்கின.
கடந்த ஆண்டு 7,031 கார் விபத்துகள் நடந்தன.
பொதுவாக விபத்து ஏற்படுவதன் முக்கியக் காரணங்களையும் அமைச்சர் சண்முகம் முன்வைத்தார்.
கவனமின்றி வாகனத்தைச் செலுத்துவது, வாகனக் கட்டுப்பாட்டை இழப்பது, கவனிக்காமல் சாலைத்தடம் மாறுவது ஆகியவற்றை அவர் குறிப்பிட்டார்.

ஆதாரம் : Mediacorp Seithi