Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

"PAPஇன் மக்கள் சந்திப்புக் கூட்டங்களின்போது சிலர் இடையூறாக இருக்கின்றனர்" - அமைச்சர் சண்முகம்

வாசிப்புநேரம் -
"PAPஇன் மக்கள் சந்திப்புக் கூட்டங்களின்போது சிலர் இடையூறாக இருக்கின்றனர்" - அமைச்சர் சண்முகம்

Facebook/K Shanmugam Sc

மக்கள் செயல் கட்சி (PAP) நடத்தும் மக்கள் சந்திப்புக் கூட்டங்களின்போது சிலர் வேண்டுமென்றே இடையூறு உண்டாக்குவதாக உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம் தமது Facebook பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நேற்று (12 மார்ச்) சொங் பாங் வட்டாரத்தில் நடந்த
சம்பவத்தைக் காட்டும் காணொளியையும் அவர் பகிர்ந்தார்.

பொங்கோலில் தங்கியிருக்கும் இரு சகோதரிகள் தம்மைச் சந்தித்து POFMA எனும் இணையத்தில் பொய்த் தகவல்களைப் பரப்புவதற்கு எதிரான சட்டத்தைப் பற்றிப் பேச வந்திருந்ததாகத் திரு சண்முகம் சொன்னார்.

தமது குடியிருப்பாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று கூறியபோது தாம் பொய் கூறுவதாக அந்தப் பெண்கள் தம்மைக் குற்றஞ்சாட்டியதாக அவர் சொன்னார்.

அதன் பின்னர் அவர்கள் தொடர்ந்து தகாத முறையில் நடந்துகொண்டதாகத் திரு சண்முகம் கூறினார்.

"மக்கள் சந்திப்புக் கூட்டங்களின்போது குடியிருப்பாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியை நாடி வருகின்றனர். அச்சமயத்தில் இதுபோன்று இடையூறு உண்டாக்குவது நியாயமல்ல," என்றார் அவர்.

அதன் பின்னர் சுமார் 45 நிமிடங்களுக்கு அவர்களுடன் அலுவலகத்தில் பேசி நடுநிலைக்கு வர முயன்றதாகவும் திரு சண்முகம் குறிப்பிட்டார்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்