$50 CDC பற்றுச்சீட்டுகளை ஒரே கட்டணத்தில் செலவழித்தால் $4 கூடுதல் பற்றுச்சீட்டு கிடைக்கும்: FairPrice
வாசிப்புநேரம் -
FairPrice கடைகளில் ஒரே கட்டணத்தில் 50 வெள்ளி பெறுமானமுள்ள CDC பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தினால் கூடுதலாக 4 வெள்ளிப் பற்றுச்சீட்டு வழங்கப்படும்.
இந்தச் சலுகை இன்றுமுதல் அடுத்த மாதம் முதல்தேதி வரை இருக்கும் என்று FairPrice குழுமம் அறிவித்துள்ளது.
அந்த 4 வெள்ளி பற்றுச்சீட்டை அதைப் பெற்றுக் கொண்ட மறுநாளில் இருந்து பயன்படுத்தலாம்.
ஜூலை 31ஆம் தேதிக்குள் அவற்றைப் பயன்படுத்தி முடிக்க வேண்டும்.
அன்றாடச் செலவுகளைச் சமாளிக்கப் பொது மக்களுக்கு உதவுவது பற்றுச்சீட்டின் நோக்கம்.
இவ்வாண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் கூடுதலாக 600 வெள்ளி CDC பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது.
ஒவ்வொரு முறையும் 300 வெள்ளியாக இரண்டு முறை அது வழங்கப்படுகிறது.
முதல் 300 வெள்ளி பற்றுச்சீட்டைச் சிங்கப்பூர் குடும்பங்கள் இன்று பெறுகின்றன.
மற்றொரு 300 வெள்ளி பற்றுச்சீட்டு 2025 ஜனவரியில் வழங்கப்படும்.

ஆதாரம் : Others