Skip to main content
லாரியில் செல்லும் வெளிநாட்டு ஊழியர்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

லாரியில் செல்லும் வெளிநாட்டு ஊழியர்கள் - பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?

வாசிப்புநேரம் -
லாரியில் செல்லும் வெளிநாட்டு ஊழியர்கள் - பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?

(படம்:Reuters/Edgar Su)

வெளியீடு : 06 Aug 2026 02:00PM புதுப்பிப்பு : 06 Aug 2026 02:44PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

லாரியில் பயணம் செய்யும் வெளிநாட்டு ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யக் கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மூத்த அமைச்சர் கா. சண்முகம் அதனைத் தெரிவித்தார்.

ஓட்டுநர்கள் மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால் விபத்து எற்படுவதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில் லாரியில் செல்லும் ஊழியர்களைப் பாதுகாக்கக் கூடுதல் முயற்சி தேவைப்படுமா என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரேச்சல் ஓங் (Rachel Ong) வினவினார்.

அதற்கு அமைச்சர் சண்முகம் பதில் சொன்னார்.

போதையில் வாகனமோட்டுவது ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்று குறிப்பிட்டார்.

சாலைப் போக்குவரத்துச் சட்டத்தில் சில திருத்தங்களைப் பரிந்துரைக்கும் மசோதா கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது.

மது அருந்திவிட்டு வாகனமோட்டும் வரம்பைக் குறைக்கவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.

திருத்தத்தின்கீழ் தடைசெய்யப்பட்ட போதைப்பொருளை உட்கொண்டு வாகனமோட்டுவது குற்றமாகக் கருதப்படும்.

ஊழியர்களின் பாதுகாப்பை மேம்படுத்த அரசாங்கம் மற்ற நடவடிக்கைகளை எடுத்ததாகவும் அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.

ஓட்டுநர்களுக்குப் போதுமான ஓய்வு கிடைப்பதை முதலாளிகள் உறுதிசெய்யவேண்டும்.

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து ஊழியர்களைக் கூண்டுபோல் அடைக்கப்பட்ட லாரியில் ஏற்றிச்செல்ல அனுமதி இல்லை.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்