Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கவனக் குறைவு, அதீதச் செயலாக்கக் குறைபாட்டுச் (ADHD) சிறுவர்களுக்கு உதவ விளையாட்டு

ADHD எனப்படும் கவனக் குறைவு, அதீதச் செயலாக்கக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு உதவும் விளையாட்டை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

வாசிப்புநேரம் -


ADHD எனப்படும் கவனக் குறைவு, அதீதச் செயலாக்கக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு உதவும் விளையாட்டை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

காணொளி விளையாட்டு வடிவில் உள்ளது CogoLand எனும் அந்த விளையாட்டு.

'Maze' எனும் குழப்பமான புதிர்ப் பாதையில் சரியான வழியில், பத்து நிமிடத்திற்குள் முடிந்த அளவு அதிகமான முறை செல்ல வேண்டும்.

ஆனால் விளையாட்டின் கதாபாத்திரம் நகர்வதற்கு எந்தப் பொத்தானையும் அழுத்தத் தேவையில்லை.

சிறுவர்களின் தலையில் பட்டை ஒன்று கட்டப்பட்டிருக்கும்.

கதாபாத்திரத்தின் மேல் சிறுவர் செலுத்தும் கவனத்தை அது நிர்ணயிக்கும்.

கவனம் சிதறாமல் இருக்கும்வரை கதாபாத்திரம் நகரும்.

கவனம் சிதறினால் கதாபாத்திரம் நின்றுவிடும்.

தொடர்ந்து கவனம் சிதறாமல் இருப்பதன்மூலம் விளையாட்டில் வெற்றிபெறலாம்.

கவனக் குறைவு, அதீதச் செயலாக்கக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள 172 சிறுவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், விளையாட்டு சோதனை அடிப்படையில் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 20 பிள்ளைகளிடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 10 ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

மனநல மருத்துவமனை, Duke-NUS மருத்துவப் பள்ளி, A*STAR’s அறிவியல் ஆய்வு அமைப்பு ஆகியவை இணைந்து விளையாட்டை அறிமுகம் செய்துள்ளன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்