Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூரர்கள் முன்பைவிட அதிகமாக உடற்பயிற்சியில் ஈடுபடுகின்றனர்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரர்கள் முன்பைவிட அதிகமாக உடற்பயிற்சியில் ஈடுபடுகின்றனர்

படம்: CNA/Tan Wen Lin

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 03 Oct 2026 03:22PM புதுப்பிப்பு : 03 Oct 2026 04:38PM
சிங்கப்பூரில் பெரியவர்கள் முன்பைவிட அதிகமாக உடற்பயிற்சியில் ஈடுபடுவதுடன் உட்கொள்ளும் சர்க்கரை அளவைக் குறைத்துள்ளனர்.

ஆனால், அவர்கள் உட்கொள்ளும் கலோரி, கொழுப்பு, சோடியம் ஆகியவற்றின் அளவு அதிகரித்துள்ளதாகத் தேசிய ஆய்வுகள் சுட்டின.

உட்கொள்ளும் கலோரியின் சராசரி அளவு:

2019ஆம் ஆண்டு: 2,360

2025ஆம் ஆண்டு: 2,460

57 விழுக்காட்டினர் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமான கலோரிகளை உட்கொண்டனர்.

சோடியத்தின்சராசரி அளவு:

2019ஆம் ஆண்டு: 3,480 மில்லிகிராம்

2025ஆம் ஆண்டு: 4,000 மில்லிகிராம்.

95 விழுக்காட்டினர் பரிந்துரைக்கப்பட்ட தினசரி சோடியம் அளவான 2,000 மில்லிகிராமைத் தாண்டினர்.

உட்கொள்ளும் சர்க்கரையின் சராசரி அளவு:

2018ஆம் ஆண்டு: 60 கிராம்

2025ஆம் ஆண்டு: 48 கிராம்

2025ஆம் ஆண்டு, பத்தில் ஏழு பேர் நாளுக்கு ஒருமுறையாவது வெளியே உணவு உட்கொண்டனர்.

சுகாதார அமைச்சும் சுகாதார மேம்பாட்டு வாரியமும் தேசிய மக்கள்தொகைச் சுகாதார ஆய்வு, தேசிய ஊட்டச்சத்து ஆய்வு ஆகியவற்றின் முடிவுகளை வெளியிட்டன.

2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2025ஆம் ஆண்டு ஜூலை வரை சுகாதார ஆய்வு நடத்தப்பட்டது.

அதில் 18 முதல் 74 வயதுடைய குடியிருப்பாளர்களின் உடல்நலம், வாழ்க்கைமுறை போன்றவை ஆராயப்பட்டன.

2025ஆம் ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் வரை ஊட்டச்சத்து ஆய்வு நடத்தப்பட்டது.

அதில் 18 முதல் 69 வயதுடைய குடியிருப்பாளர்களின் உணவுப் பழக்கங்களும் ஊட்டச்சத்து நிலையும் ஆராயப்பட்டன.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்