மின்-சிகரெட்டுகளை வாங்கும், பயன்படுத்தும், அதை வைத்திருக்கும் மாணவர்களுக்கு எச்சரிக்கை

(படம்:unsplash)
ஜூன் மாதப் பள்ளி விடுமுறையை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு வாரியமும் சுகாதார அறிவியல் ஆணையமும் பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் மின்-சிகரெட்டுகளைப் பற்றிய ஆலோசனை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மின்-சிகரெட்டிகளை வாங்குவதும், புகைப்பதும், விநியோகிப்பதும், பயன்படுத்துவதும் சட்டவிரோதமானது.
புகையிலைச் சட்டத்தின்கீழ்:
📌 மின்-சிகரெட்டுகளையோ அதன் பாகங்களையோ வாங்குவது, பயன்படுத்துவது, வைத்திருப்பது சட்டவிரோதமான செயல்.
📌 பிடிபடுவோருக்கு 2,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.
📌 அவற்றை விளம்பரம் செய்வது, உற்பத்தி செய்வது, விற்பது, வைத்திருப்பது, விநியோகிப்பது ஆகிய செயல்களும் சட்டவிரோதமானவை.
📌 முதல்முறை பிடிபடுவோருக்கு 10,000 வெள்ளி அபராதம், 6 மாதம் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்
📌 மின்-சிகரெட்டுகள் தொடர்பான குற்றம் புரிவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
சிகரெட்டுகளைப் புகைப்பது போல் மின்-சிகரெட்டுகளைப் புகைப்பதும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும்; வாழ்நாள் முழுவதும் அடிமையாக்கும்.
📌 மின்-சிகரெட்டுகளில் nicotine, benzene, formaldehyde, ஆகிய நச்சு ரசாயனங்கள் உள்ளன.
📌 அவை மூளையின் வளர்ச்சியைப் பாதிக்கும்.
📌 புற்றுநோய், கருவுறுவதில் சிக்கல் ஆகியவை ஏற்படவும் வாய்ப்புண்டு.
பள்ளிகளில் மின்-சிகரெட்டுகளைப் பயன்படுத்தும் அல்லது வைத்திருக்கும் மாணவர்களைப் பற்றித் தெரியவந்தால், உடனடியாக ஆசிரியர்களிடம் தெரிவிக்கவேண்டும் என்று வாரியம் மாணவர்களுக்கு வலியுறுத்தியது.
உதவிக்கு 1800 438 2000 QuitLine எனும் எண்ணைத் தொடர்புக்கொள்ளலாம்.