ரகசியச் சட்டத்தை மீறி நண்பனுக்குத் தகவல் கொடுத்த அதிகாரிக்குச் சிறை
வாசிப்புநேரம் -
படம்: கோப்புப் படம்/State Courts in Singapore
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
உள்துறை அமைச்சின் உள்கட்டமைப்பில் உள்ள தகவல்களை அத்துமீறிப் பயன்படுத்திய முன்னாள் போக்குவரத்துக் காவல் அதிகாரிக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றம் புரிந்தவர், 29 வயது சிவசூரியா மணியம் கேசவல் (Shivasuria Maniam Kesaval).
தமது 25 வயது நண்பர் பிரேடன் ஓங் யீங் ஷானுக்கு (Braydon Ong Ying Shan) உதவி செய்யும் நோக்கத்தில் உள்துறை அமைச்சின் உள்கட்டமைப்பைப் பயன்படுத்தினார்.
2022ஆம் ஆண்டு பிரேடன் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டியிருந்தார்.
அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. அதே ஆண்டில் அவர் பிடிபட்டார்.
பிரேடன், உரிமம் இல்லாமல் தாம் வாகனம் ஓட்டியதைக் காவல்துறைக்கு புகார் அளித்தது யார் என்பதை அறிய விரும்பினார்.
அப்போது போக்குவரத்துக் காவல்துறையில் வேலை செய்துகொண்டிருந்த நண்பர் சிவசூரியாவை அணுகினார்.
சிவசூரியாவும், உள்துறை அமைச்சின் உள்கட்டமைப்பைப் பயன்படுத்தினார்; பிரேடன் மீது புகார் கொடுத்தது அவரது முன்னாள் காதலி என்பதைக் கண்டுபிடித்தார். பிரேடனிடம் தகவலைப் பகிர்ந்தார்.
பிரேடன் தகவலை வைத்து முன்னாள் காதலியை மிரட்டினார்.
அதிகாரத்துவ ரகசியச் சட்டத்தை (Official Secrets Act) மீறியதற்கு சிவசூரியாவுக்கு 16 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பிரேடனுக்குக் கைதாணை பிறப்பிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.

ஆதாரம் : Mediacorp Seithi