Skip to main content
நலமாக மூப்படையும் திட்டம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

நலமாக மூப்படையும் திட்டம் - மேலும் 3 வட்டாரங்களுக்கு விரிவாக்கம்

வாசிப்புநேரம் -
மூத்தோர் அதிகமாக வசிக்கும் மேலும் 3 வட்டாரங்களில் நலமாக மூப்படைதல் எஸ்ஜி செயல்திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது.

பிடோக், புக்கிட் பாஞ்சாங், தியோங் பாரு- ரெட்ஹில் ஆகியன அந்த மூன்று பகுதிகள்.

அங்கு சமூகச் சுகாதாரச் சேவைகள், வீட்டு உதவித் திட்டங்கள், மூத்தோருக்கான வசதிகள் செய்துதரப்படும்.

மூத்தோர் சமூகத்தில் சுயமாக வாழ உதவுவதே திட்டத்தின் நோக்கம்.

கடந்த ஆண்டு தோ பாயோவில் அந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

4 அம்சங்களில் 110,000க்கும் அதிகமான மூத்தோர் பயன்பெறவுள்ளனர்.

புதிய வசதிகளில் உடற்பயிற்சிப் பாதைகள், தடையில்லாமல் வசதிகளைப் பயன்படுத்துதல்,
முதுமை மறதிநோயால் பாதிக்கப்படுவோருக்கு உகந்த வசதிகள், மனதிற்கு இனிமையான சுற்றுச்சூழல் ஆகியவை அடங்கும்.

அந்த மேம்பாடுகள் அடுத்த ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்